நண்பர்கள் சந்திப்பு (தாய்லாந்து சுற்றுலா) கல்லூரி நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டிற்கு ஐந்து நாட்கள் சுற்றுலா சென்றது பற்றிய பயண அனுபவம். வருடா வருடம் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ஜூலை மாதம் இரண்டு நாட்கள் ஏதாவது ஒரு சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களை கழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். எனது கல்லூரியில் 1993 - 1996 வருடம் படித்த நண்பர்கள் சுமார் 30 பேர் ஒன்று சேர்ந்து வருடத்தில் இரண்டு நாட்கள் செலவழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதற்க்கெல்லாம் தொடக்க புள்ளியாக இருந்து ஆரம்பித்த நண்பன் அசோக்குமார் இப்போது எங்களுடன் இல்லை என்பது மிக வருத்தமாக இருக்கிறது. ஆம் 1996 வருடம் கல்லூரி முடிந்து அவரவர் அவர்கள் வழியில் சென்றுகொண்டு இருந்தவர்களை 2006 ஆம் வருட...
Posts
Showing posts from 2019
- Get link
- X
- Other Apps
பயணங்கள் ஓய்வதில்லை ... இரண்டு நாட்கள் இன்ப சுற்றுலா - கேரளம். நண்பர்களே, எனது குடும்பத்தினருடன் இரண்டு நாட்கள் இன்ப சுற்றுலா மே மாதம் 10 ஆம் தேதி 2019 இரவு ஈரோட்டில் இருந்து கிளம்பி 12 ஆம் தேதி இரவு வரை இரண்டு நாட்கள் கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தோம். அந்த பயண அனுபவம் பற்றி இங்கு சொல்லவிருக்கிறேன். திடீர் என்று என் மனைவியின் சகோதரிகள் குடும்பத்தினர் அவர்களின் மகன்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பு செல்ல விருக்கிறார்கள் என்று கூறி அடுத்த ஒரு வருடம் படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த கோடை விடுமுறையை ஒரு இன்ப சுற்றுலா சென்று வந்தால் அவர்களுக்கு புத்துணர்வு அளித்தது போல் இருக்கும் அனைவரும் ச...