நீண்ட இடைவேளைக்கு பிறகு
நீண்ட இடைவேளைக்கு பிறகு....
என்னுடைய எண்ணஓட்டங்களை இங்கு பதிவிடவேண்டும் என்று தான் இந்த வலைத்தலை பக்கத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினேன். சில பல காரணங்களால் தொடர்ந்து பதிவிட முடியாமல் போனது. இப்போது மீண்டும் ஆர்வம் வந்ததால் இங்கு தொடர்ந்து எனது எண்ணங்களை பதிவிட விரும்புகிறேன்.
சமுதாயத்தில் தற்போது நடக்கும் நிகழ்வுகளை பற்றிய பொதுவான யார் மனதையும் புண்படுத்தாமல் என்னுடைய பதிவுகளை பதிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அன்றாட நிகழ்வுகளை பற்றி பதிவிடும் போது ஒரு சிலரின் மனதை புண்படுத்தாமல் எதையும் இங்கு பதிவிட முடியாது என்பது தெரிந்தும் நான் மிகவும் கவனமுடன் தான் எனது பதிவுகளை பதிவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
விமர்சனங்களாகட்டும், அன்றாட நிகழ்வுகள் பற்றிய பொதுவான பதிவுகளாகட்டும், நகைச்சுவையான பதிவாகட்டும், இப்பதிவுகளிலும் ஒரு சாராரின் மனதில் ஒரு நெருடல் ஏட்படும். ஆனால் அதுபற்றி கவலைப்பட்டால் நாம் எப்போதும் எதுபற்றியும் நமது கருத்துக்களை எந்த ஊடகங்களிலும் பதிவிடுவது கடினம்.
ஆகவே நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பற்றி சரியோ தவறோ கருத்துக்களை பதிவிட வேண்டுமே தவிர பதிவிடாமல் இருப்பது தவறு. ஆனால் வேண்டும் என்றே தவறான தேவையற்ற விஷயங்களை பற்றி பெரும்பாலானோர் விரும்பாத பதிவுகளை தவிர்க்கலாம் என்பதே எனது மேலானகருது.
நமது பதிவு பெருவாரியான மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக அவரவர் தாய் மொழியில் பதிவிட வேண்டியது அவசியம்.
ஆனால் அதையும் தாண்டி நமது கருத்துக்கள் மொழி, மதம், இனம் மற்றும் நாடு கடந்து அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றால் உலகில் பொதுவான மொழியை அறியப்பட்ட ஆங்கிலத்தில் பதிவுடுவதி எந்த தவறும் இல்லை...