Posts

Showing posts from November, 2019
Image
                      நண்பர்கள் சந்திப்பு                      (தாய்லாந்து சுற்றுலா) கல்லூரி நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டிற்கு ஐந்து நாட்கள் சுற்றுலா சென்றது பற்றிய பயண அனுபவம்.            வருடா வருடம் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ஜூலை மாதம் இரண்டு நாட்கள் ஏதாவது ஒரு சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களை கழிப்பதை  வழக்கமாக கொண்டிருக்கிறோம். எனது கல்லூரியில் 1993 - 1996 வருடம் படித்த நண்பர்கள் சுமார் 30 பேர் ஒன்று சேர்ந்து வருடத்தில் இரண்டு நாட்கள் செலவழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.            இதற்க்கெல்லாம் தொடக்க புள்ளியாக இருந்து ஆரம்பித்த நண்பன் அசோக்குமார் இப்போது எங்களுடன் இல்லை என்பது மிக வருத்தமாக இருக்கிறது.  ஆம் 1996 வருடம் கல்லூரி முடிந்து அவரவர் அவர்கள்  வழியில் சென்றுகொண்டு  இருந்தவர்களை 2006 ஆம் வருடம் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நண்பன் அசோக்குமார் தொடர்பில் இருந்த அனைவரையும் அழைத்தான். அங்கே தொடங்கியது தான் இந்த நண்பர்கள் சந்திப்பு பயணம்.  நண்பர்கள் அசோக்குமார், பிரகாஷ் குமார் மற்றும் பாலாஜி ஆகியோர்  முயற்சியினால் தொடர்ந்து  வருடா